Health · dormant
Primary Health Centre upgrades
3 budgets named it 6 year span — ₹ crore allocated 44 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2012-13 and named again in 2 later budgets, most recently 2017-18.
Allocated by budget year
See it on the map → All Health projects →
What each budget said, year by year
2012-13
“In the coming year twenty Primary Health Centres will be upgraded in blocks which do not have an upgraded Primary Health Centre.”
“தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்காக, 2012-2013 ஆம் ஆண்டில் இந்த அரசு 950 கோடி ரூபாய் செலவிடும். தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத வட்டாரங்களில், 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரும் ஆண்டில் தரம் உயர்த்தப்படும் இந்த அரசின் முந்தைய ஆட்சிக் காலத்தின்போது தொடங்கப்பட்ட தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டம், வட்ட, மாவட்ட மருத்துவமனைகளில் பேறுகால மற்றும் குழந்தைகள் மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகித்துள்ளது. 2012-2013 ஆம் ஆண்டில், இதற்காக 158 கோடி ரூபாய் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶87) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.55 · ¶87 · source PDF ↗ · on the map →
2016-17
“this Government will establish 37 new Primary Health Centres (PHCs) and upgrade 24 existing PHCs into 30 bedded PHCs during 2016-2017.”
“அனைத்து மக்களும் பொது சுகாதார சேவையை எளிதில் பெறுவதை உறுதி செய்ய, 2016-2017 ஆம் ஆண்டில் இந்த அரசு 37 ஆரம்ப சுகாதார நிலையங்களைப் புதிதாக அமைப்பதுடன், ஏற்கெனவே இயங்கிவரும் 24 ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கைகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாகத் தரம் உயர்த்தும். கடலூர் மற்றும் திருப்பூரில் தலா 20 கோடி ரூபாய் செலவில் புதிய மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவுகளை ஏற்படுத்துவது; தலா 10 கோடி ரூபாய் செலவில் தாம்பரம், கிருஷ்ணகிரி மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் உள்ள விபத்து சிகிச்சை மையங்களை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக, 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், “தேசிய சுகாதாரத் திட்டத்தின்” (National Health Mission) கீழ் 1423.38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூலதனக் கணக்கில் செலவுகள் 2016-2017 ஆம் ஆண்டில் மூலதனப் பணிகளுக்கான செலவுகளை உயர்த்த மாநில அரசு கருதியுள்ளது. அதன் விளைவாக, மூலதனம் குறித்த செலவுகளுக்கு 2015-2016 ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டில் செய்யப்பட்ட ஒதுக்கீடான 22,878.45 கோடி ரூபாய், 2016-2017 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 24,679.38 கோடி ரூபாயாக கணிக்கப்பட்டுள்ளது. இது 2017-2018 ஆம் ஆண்டில் 9.25 சதவீதம் மற்றும் 2018-2019 ஆம் ஆண்டில் 11.13 சதவீதமாகவும் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. IV. வருவாய்ப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், வருவாய்ப் பற்றாக்குறை 9,154.78 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது. எனினும், தொடர்ந்து வரும் உலகப் பொருளாதார மந்த நிலையால் வரி வருவாய் வளர்ச்சி குறைவாக உள்ளது. மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வளர்ச்சி விகிதத்தில் குறிப்பிடத் தகுந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பெட்ரோலியப் பொருட்கள் விற்பனை மீதான வரி வருவாயில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், வணிக வரி வரவுகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி காணப்படுகிறது. இக்காரணிகளைக் கணக்கில் கொண்டு 2016-2017 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் வருவாய்ப் பற்றாக்குறை 15,854.47 கோடி ரூபாயாக திருத்தப்பட்டுள்ளது. 2016-2017 ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 40,533.84 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 2.96 சதவீதமாகும். மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப் பற்றாக்குறை விகிதம் 2017-2018 ஆம் ஆண்டில் 3.34 சதவீதமாகவும், 2018-2019 ஆம் ஆண்டில் 2.96 சதவீதமாகவும் இருக்கும். 2017-2018 ஆம் ஆண்டில் ஏற்படக்கூடிய கூடுதல் செலவினங்களைச் சமாளித்து நிதிப் பற்றாக்குறையை வரையறுக்கப்பட்ட மூன்று சதவீதத்திற்குள்ளாகவே கட்டுப்படுத்துவதற்கு, மாநில அரசு கூடுதல் நிதி ஆதாரத்தைத் திரட்டுவது அல்லது செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியமாகும். V. கடன்கள் பதினான்காவது நிதி ஆணையம் பரிந்துரைத்த கணக்கீட்டின்படி மத்திய அரசு நிர்ணயித்த ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில், கடன் வரவுகள் மற்றும் திரும்பச் செலுத்துதல் மதிப்பிடப்பட்டுள்ளன. மத்திய அரசு, 2011-2012 ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பை திருத்தம் செய்துள்ளதால், 2016-2017 ஆம் ஆண்டிற்கான நிகரக் கடன் வரம்பு 37,782 கோடி ரூபாயிலிருந்து 41085 கோடி ரூபாயாகத் திருத்தப்பட்டுள்ளது. 2016-2017 ஆம் ஆண்டில் நிகர கடன் வாங்குதல் 40,529 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட நிலுவையிலுள்ள கடன் 31.03.2017 அன்று, 2,52,431 கோடி ரூபாயாக இருக்கும். இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 18.43 சதவீதம் மட்டுமே ஆகும். VI. கடன் உத்திரவாதங்கள் ஒவ்வொரு ஆண்டிலும் நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள் முந்தைய ஆண்டின் மொத்த வருவாய்க் கணக்கு வரவுகளில் 100 சதவீத அளவு அல்லது மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 10 சதவீத அளவு, இவற்றில் எது குறைவானதோ அந்த அளவிற்குள் அமையப்பெற வேண்டும். 31.3.2015 அன்று உள்ளபடி நிலுவையிலுள்ள அரசு உத்தரவாதங்களின் அளவு முந்தைய ஆண்டின் மொத்த வருவாய் வரவுகளில் 49.70 சதவீதமாகவும் மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 4.91 சதவீதமாகவும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும் மீளப்பெறும் சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் (Risk weighted) கணக்கிடப்பட்ட நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள் முந்தைய ஆண்டின் மொத்த வருவாய்க் கணக்கு வரவுகளில் 75 சதவீதம் அல்லது மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 7.50 சதவீதம் இவற்றில் எது குறைவானதோ அந்த அளவிற்குள் அமையப்பெற வேண்டும். 31.3.2015 அன்று உள்ளபடி மீளப்பெறும் சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்களின் (Risk weighted guarantees) அளவு, முந்தைய ஆண்டின் மொத்த வருவாய் வரவுகளில் 9.28 சதவீதமாகவும் மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 0.92 சதவீதமாகவும் உள்ளது. முடிவுரை மாநிலத்தின் பொருளாதாரம் மந்த நிலையிலிருந்து மீண்டு வளர்ச்சிப் பாதையில் செல்வதை, 2012-2013 ஆம் ஆண்டில் 4.85 சதவீதமாக இருந்த மாநில மொத்த உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி விகிதமானது நிலையான விலைகளின் அடிப்படையில்), 2015-2016 ஆம் ஆண்டில் 8.79 சதவீதமாக அதிகரித்துள்ளது தெளிவாக்குகிறது. இருப்பினும், மாநிலத்தின் சொந்த வரி வருவாய், குறிப்பாக, வணிக வரி வருவாய் வரவுகளின் குறைந்த வளர்ச்சி விகிதம், வருவாய் வரவுகளில் கடுமையான வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மத்திய அரசு மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கக்கூடிய நிகர வரி வருவாயில் தமிழகத்தின் பங்கு குறைந்ததும், மத்திய அரசால் காலம் தாழ்த்தி உதவி மானியங்கள் விடுவிக்கப்படுவதும், மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு தனது பங்கினைக் குறைத்துள்ளதும் மாநிலத்தின் நிதிநிலையை கூடுதலாக பாதித்துள்ளது. எனினும், செலவுகளின் பாங்கு நிலையாக உள்ளது. வருவாய் வரவுகளில் காணப்படும் இந்த சுணக்கமான சூழ்நிலையிலும், 2017-2018 ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறையைத் தவிர்த்து, ஏனைய ஆண்டுகளில் ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை, நிகரக் கடன், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் நிலுவையில் உள்ள மொத்தக் கடன் விகிதம் ஆகியவை அனுமதிக்கப்பட்ட அளவிற்குள்ளேயே கட்டுப்படுத்தப்படும். மாநிலப் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அரசு அனைத்து வகையான நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது. 262626 226 962626 9626262626 KOK 2K OK”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶111) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.55 · ¶111 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.43.76 crore
“To improve the accessibility of primary healthcare, this Government will establish 30 new Primary Health Centres (PHCs) and upgrade 12 PHCs into 30 bedded PHCs in 2017-2018 at a cost of Rs.43.76 crore under the National Rural Health Mission (NRHM).”
“இத்தகைய முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல, பொது மருத்துவக் கட்டமைப்பை இந்த அரசு தொடர்ந்து வலுப்படுத்துவதுடன், பயனாளிகள் சார்ந்த நலத்திட்டங்களையும் முனைப்போடு வழங்கி வருகிறது. ஆரம்ப சுகாதார மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் வகையில், தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தின்” (National Rural Health Mission) கீழ், 2017-2018 ஆம் ஆண்டில் 43.76 கோடி ரூபாய் செலவில் 30 ஆரம்ப சுகாதார நிலையங்கள் (Primary Health Centres) புதிதாக அமைக்கப்படுவதுடன், 12 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கைகள் கொண்ட, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாகத் தரம் உயர்த்தப்படும். தேசிய நகர்ப்புர சுகாதாரத் திட்டத்தின்” (National Urban Health Mission) &) நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்களில் 15.09 கோடி ரூபாய் செலவில் 96 பல்நோக்கு சிகிச்சை மையங்களை இந்த அரசு அமைக்கும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶102) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.58 · ¶102 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Polyclinics in Urban Primary Health Centres · 2017-18
- contains National Health Mission (overall) · 2014-15 –2025-26
- runs alongside Urban primary health care expansion · 2011-12
- runs alongside 118 new Primary Health Centres · 2014-15
Nearby in the same sector
- Chief Minister's Comprehensive Health Insurance Scheme · 14 years
- Dr. Muthulakshmi Reddy Maternity Benefit scheme · 13 years
- Free sanitary napkins for rural girls · 7 years
- Tamil Nadu Health System Project (TNHSP) · 7 years
- Tamil Nadu Urban Healthcare Project · 6 years
- 108 Emergency Transport Services improvement · 5 years